top of page

ஏன் இயற்கை வழி கட்டுமானங்கள் இன்றைய அவசிய தேவை?

​

நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, அருந்தும் நீர் என அனைத்தும் மாசடைந்ததை நாம் அறிவோம். பிளாஸ்டிக் பொருட்களின் மாசுபாட்டால் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். ஆனாலும், இதைப் போன்றே ஆபத்து நிறைந்த, நாம் பெரிதாக பொருட்படுத்தாத ஒரு வகை கழிவு எல்லா இடங்களிலும் நிரம்பியிருக்கிறது.

​

​

laurie EP 1 .jpg

ஏன் இயற்கை வழி கட்டுமானங்கள் இன்றைய அவசிய தேவை?

​

நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, அருந்தும் நீர் என அனைத்தும் மாசடைந்ததை நாம் அறிவோம். பிளாஸ்டிக் பொருட்களின் மாசுபாட்டால் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். ஆனாலும், இதைப் போன்றே ஆபத்து நிறைந்த, நாம் பெரிதாக பொருட்படுத்தாத ஒரு வகை கழிவு எல்லா இடங்களிலும் நிரம்பியிருக்கிறது.

​

​

lauri-baker_suresh-house-1_1440.jpg

அது கட்டுமானக்குப்பை / கட்டுமானக்கழிவு!


கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், பல லட்சக்கணக்கில் கட்டிடங்களைக் மிக விரைவாக எழுப்பியுள்ளோம். இதற்காக எவ்வளவு இடங்களை, பொருட்களை, ஆற்றலை நாம் துரித கதியில் பெரும் எந்திரங்களின் உதவியுடன் சுரண்டி நுகர்ந்து தீர்த்துவருகிறோம் என்பதைக் நம் கண்முன்னே காட்டுகிறது. அதே வேகத்தில், நாம் கட்டுமான குப்பைகளையும் கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம் என்பது பலரும் சிந்திக்காதவை.

​

நாம் வசிக்கும் இடம் மிக திடமாக அமைக்கும் எண்ணத்தில், இயற்கை வளங்களை ஓயாமல் சுரண்டுகிறோம். 2019 ஆம் ஆண்டில் தி கார்டியன் நாளிதழ் "சிமெண்ட்" உலகத்தின் மிக அழிவுகரமான பொருள் என்று குறிப்பிட்டுள்ளது. நாளொன்றிற்கு நாம் பல டன் கணக்கில் சிமெண்டும் எஃகும் பயன்படுத்தி வருகிறோம். நமது கட்டிடங்களின் சாந்திற்கும் பூச்சிற்குமாக ஆற்று மணலை வாரிக் குவித்து பல ஆறுகளைக் கொன்றுவிட்டோம். கான்க்ரீட் நீரற்றுதலுக்காக தண்ணீரை மில்லியன் லிட்டர் கணக்குகளில் செலவழிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அறிய வேண்டிய பாடம் என்னவென்றால் இவை அனைத்தும் மறுசுழற்சி செய்யக்கூடியவை அல்ல என்பதே. கான்க்ரீட் நம் நவீன முதலாளித்துவ சமுதாயத்தில், மனிதகுலத்திற்க்கே உறைவிடம் அமைத்துள்ளது, ஆனால் மோசமான அவற்றின் மறுபக்கத்தையும் நாம் ஆராய வேண்டும். இக்கட்டுமான முறைகள் கான்க்ரீட் கழிவுகளை தொழிற்சாலை கழிவுகளையும் உண்டாக்கி பெரும் சிக்கலில் சேர்க்கின்றன.

​

தராசின் ஒருபுறத்தில் மரம், செடி போன்ற அனைத்து உயிரினங்களின் கரிம எடையை வைத்து, மறுபுறத்தில் கான்க்ரீட்டின் கரிம எடையை வைத்தால் கான்கிரீட்டின் எடையே அதிமாக இருப்பதற்கு சான்றுகள் உள்ளன. நாம் சிறிது சிறிதாக இயற்கை நிலங்களை கான்கிரீட் மயமாக்கி வருகிறோம்.

​

மிகவும் உயரமான, பரந்த, வானளாவிய நவீன கட்டிடங்களை, நம்முடைய சமூக அந்தஸ்தை அளக்கும் கருவியாக கருதும் நாம் அதனால் ஏற்படும் நீண்டகால பின்விளைவுகளைக் குறித்து சிந்திக்க தவறி விடுகிறோம். அதிகரித்து வரும் மணல் கொள்ளை, சட்டவிரோதமாக மரங்களை அழிப்பது, பழங்குடி நிலங்களின் கனிமவளங்களை தோண்டுவது போன்ற செயல்களால் நம் கட்டுமான தொழிலின் அறமும் நெறிமுறைகளும் குறைந்து கொண்டே வருகிறது.

​

நாம் எதை கட்டுகிறோமோ, இறுதியில் அதுவே நம்மை கட்டுவிக்கும் என்னும் ஒரு கருத்துண்டு. நம் மனதிற்கு இணக்கமான முறையில், நம்முடைய ஆரோக்கியத்திற்கு உறுதுணையாய் நிற்க கூடிய, நம் எளிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும், சிறிய கட்டிடங்களே நமது இன்றைய தேவையாய் இருக்கிறது. உயரமான, பரந்த, வானளாவிய நவீன கட்டிடங்களை விட சிறிய அளவிலான அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போன்ற எளிய கட்டிடங்களே நமது அத்தியாவசியம். நமது கட்டுமான முறைகளை எந்த பின்விளைவுகள் ஏற்படுத்தாத முறைகளாக மாற்ற வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது. நம்முடைய கட்டிடங்கள் உயிரோட்டமாகவும் சுற்றுசூழலுக்கு தகுந்தவைகளாகவும் வடிவமைக்கப்பட வேண்டும். இந்த எளிய நுகர்வற்ற கட்டுமான முறையை குறிக்கும் சொல் தான் "இயற்கை வழி கட்டுமானங்கள் அல்லது மரபு கட்டுமானங்கள்".

47746-bdonline.co_.ul_.jpg
rat-trap-bond.png
lb 4.jpg
laurie-baker-design-500x500.jpg

 

இயற்கை வழி கட்டிடங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவ்வகை கட்டுமானங்கள் பல நூற்றாண்டுகளாக நமது சிற்றூர்களில் பயன்பாட்டில் இருப்பவையே.இதில் தேர்ச்சி பெற்ற நம் முன்னோர்கள், இவ்வழி கட்டுமானங்கள் குறித்த பல சிறந்த வழிமுறைகளையும், தொழிநுட்பங்களையும் நமக்கு முன் வைத்து சென்றுள்ளனர். இவற்றில் பல, அழியும் நிலையில் இருப்பது மிகுந்த வலியை ஏற்படுத்துவதாகும். காந்திய தத்துவத்தின் படி, இயற்கை வழி கட்டிடங்களே ஒரு தற்சார்பு கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாய் நிற்பது.

​

இயற்கைக் கட்டுமானங்கள் என்பவை உள்ளூரில் கிடைக்ககூடிய பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் வைத்து குறைந்த வளங்களையும், ஆற்றலை பயன்படுத்தி கட்டிமுடிக்கப்படுபவை என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் நினைத்துவிடக்கூடாது. அவை வாழும் முறையில் அதிகப்படியான விழிப்புணர்ச்சியைக் கொண்டதாகவும், குறைவான நுகர்வைப் போற்றி எளிய இனிய வாழ்விற்கு வழிவகுக்கும் சிந்தனையை உடன் கொண்டது.

​

இயற்கைக் கட்டுமானத்தின்படி ஒரு கட்டுமானத்தை கட்டுவது என்பது அது கட்டப்படும் இடத்தினைப் பற்றிய ஆழமாக அறிந்துகொள்வதிலிருந்து தொடங்குகிறது. நல்ல உறைவிடமாக அந்த கட்டுமானம் அமைய,அதனைப் பயன்படுத்துவோர், அந்த இடத்தின் தட்பவெப்பச்சூழல், சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றுடன் முழுக்க முழுக்க இணங்கிச் சென்று இனிமையான சூழலைத் தரும். அனைத்து மரபு கட்டுமான நிபுணர்களும் தட்பவெட்ப நிலைகளை நன்கு கற்று தெளிந்தவரே. ஐம்பூதங்களான வெப்பம், காற்று, நிலம், நீர் மற்றும் ஆகாயமே ஒரு கட்டிடத்தை வடிவமைக்கின்றன. நம் தட்பவெட்பங்களிற்கு ஏற்ப வடிவமைப்பதென்பது நம் உட்புற சூழலை சுகமாக வைப்பதிலும், நாம் நுகரும் ஆற்றலை குறைக்கவும் உதவுகிறது. கட்டுமானத்தை பயன்படுத்துவோரின் பழக்க வழக்கங்கள், தொழில், சமூக சிந்தனை, வாழ்க்கை முறை அனைத்திற்கும் ஏற்பவே ஒரு பொருத்தமான கட்டிடம் அமையும். கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களுக்கான மூலங்களைத் தேடிக்கண்டறிதல், உள்ளூரில் கிடைக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகியன அவசியம்.கட்டுமான பொருட்களே ஒரு கட்டிடடத்திற்கு உயிரையும் ஆன்மாவையும் தருவது. சரியான பொருட்களின் மூலம் சுவர்களை சுவாசிக்க செய்ய முடியும், உஷ்ணமான நாட்களை குளிர்ச்சியாகவும், குளிரான இரவுகளை வெப்பமாக்கவும் வல்லமையுடையது.

​

உலகமயமாக்கத்தினால் சிமெண்ட் தற்போது நமது உள்ளூர் பொருள் போல் உருவமெடுத்துள்ளது. நம் சிற்றூர்களில் பழங்கால கட்டுமானங்களை பார்வையிட்டால், முற்றிலுமாக சிமெண்டை அகற்றி, தொழிற்சாலை பொருட்கள் அறவே இன்றி ஒரு கட்டுமானத்தை எழுப்ப முடியும் என்பது விளங்கும்.

​

நாம் கட்டுமான பொருட்களுடன் பழகி, அவற்றை கொண்டு ஒரு கட்டுமானத்திற்கு உயிர் கொடுக்கும் தருணங்கள் மிக அற்புதமானவை. புவியோடு இயைந்ததொரு தியானமாக இயற்கைக் கட்டுமானத்தின் பணி துவங்குகிறது. இந்தப்பயணத்தில் தன்னையே மறந்து கட்டிடங்களுடன் ஆழ்ந்த உரையாடலைத் துவங்குகிறப் பணியாளர்கள் பலர் உண்டு.

Laurie Baker | Laurie Baker works | Laurie Baker concepts | Vernacular architecture | Kali natural buildings initiative

bottom of page