தமிழகத்தின் சுடுமண் சிற்பங்கள்
தமிழக கிராமங்களில், இரவு நேரத்தில் அய்யனார் சாமி காவலுக்கு நிற்கும் என்பது அய்தீகம். பரந்த தோற்றத்துடன், பெரிய கண்களும், துணிவான மீசையும் , பெரிய கத்தியுடனும் காணப்படுபவர் அய்யனார். அவருடைய கோவிலின் இரு பக்கங்களிலும் 15' உயரமான மண்குதிரைகள் காணப்படுகின்றன. இக்குதிரைகள் அய்யனாரின் இரவு பயணத்திற்காக செய்யப்படுபவை. எந்த பிரச்னைக்கும் காவலாக இருப்பவர் அய்யனார் சாமி என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

இம்மண் குதிரைகள் இந்தியாவிலே மண்ணை வைத்து செய்த மிக பெரிய சாதனை. இவ்வாறான வடிவங்களே வெறும் மண்ணை வைத்து செய்ததில், 100 வருடங்கள ுக்கு மேலொன்றி நிற்கின்றன. இந்த கம்பீரமான குதிரைகள் மிக நுட்பமாக செய்யப்படுபவை. துரதிட்டவசமாக, இவை தமிழகத்தில் முன்போல் செய்யப்படுவதில்லை. இதை செய்யும் நுட்பமும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறது.

பாரம்பரியமாக, இந்த தொழிலை முன்னெடுத்து செய்வது குயவர் அல்லது வேளார் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். பானை செய்வதில் மட்டும் திறமையானர்வர்கள் அல்லர் இவர்கள். 4-5 குயவர் சேர்ந்தால், இந்த மண் குதிரைகளை 15ஏ நாட்களில் செய்து முடித்துவிடுவர்.இந்த குதிரைகளை செய்ய, ஐம்பூத கொள்கைகளை நன்று புரிந்து தெரிந்திருக்க வேண்டும். இவர்களுடைய அனுபவத்திற்கான சான்று, 100 வருடங்களுக்கு மேல் ஓங்கி நிற்கும் இந்த குதிரைகள் தான். மழை பெய்தால் கூட, தண்ணீர் இந்த குதிரைகளை ஒன்றும் செய்யாது. பல ஆண்டுகள் கழித்தும் கூட, வெடிப்போ, உடைவதோ நடப்பதில்லை.

ஒரு சேவலின் கழுத்தை அறுத்து, அதன் ரத்தத்தை நிலத்தில் சோற்றி, குதிரைக்கான இடத்தை வகுக்கின்றனர். தேங்காய், சோறு, சாராயம் போன்ற பல வகையான படையல்கள் அய்யனாருக்காக வைத்து வணங்கிவிட்டு தான், குதிரை செய்ய தொடங்குகின்றனர். இந்த மண் குதிரைகள் 9' முதல் 20' உயரம் வரை செய்யப்படலாம். வெறும் மண்ணோடு சேர்த்து, அரிசி கருக்காய் கலந்து தான் குதிரை வடிவமைக்கிறார்கள். நுட்பான இடங்களுக்கு, மண்ணுடன் வைக்கோல் சேர்த்து செய்கிறார்கள். இந்த பொருட்கள் குதிரை பலமாக இருப்பதற்கும், நல்ல உயரமாக செல்வதற்கும் தேவை.
ஒரு வட்ட குழியில், வண்டல் கூடிய மண்ணும், செம்மண்ணும் கழிக்கின்றனர். தண்ணீர் ஊற்றி தேவையான பதத்திற்கு கொண்டு வரப்படும் அந்த கலவை. இழுவிசைக்காக அரிசி கருக்காய் சேர்த்து, காலால் மிதித்து கலந்து விடுகின்றனர். பல வருட அனுபவத்தால், அந்த மண்ணின் பதத்தை அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.

பானை செய்யும் முறையையும், சுருளாக செய்யும் முறையையும் சேர்த்துதான் இந்த குதிரைகள் வடிவமைக்க படுகிறன்றனர். அந்த குதிரையை மூன்று பாகங்களை செய்யப்படும் - கீழ் கால் பகுதி,மேல் தொடை பகுதி, மற்றும் கழுத்தும் தலையும். ஒரு தொங்குக்கட்டை வைத்து முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் இணைகின்றனர். சற்றே தண்ணியாக கலந்த மண்ணை மேல் பூச்சிற்கு சமப்படுத்துகின்றனர். கழுத்தும் தலையும் பானை செய்யும் சக்கரத்தில் வைத்தே வடிவமைக்க படுகிறது. பின்னர், உடலுடன் இணைத்துவிடுகின்றனர். சற்று கெட்டியான கலவையை வைத்து மற்ற அலங்காரத்தை செய்கின்றனர். குதிரைக்கு கயிறு, மணி, பற்கள் மற்றும் கண்களை செதுக்கி எடுப்பர். யாழியின் முகத்தை குதிரையின் மார்பில் பதிகின்றனர்.இறுதியாக, இவற்றை காயவைத்து, சூளையில் எரித்து, அதற்கு மேல், சுண்ணாம்பு அல்லது செம்மண் கலவை பூசிவிடுவார்கள்.
நாம் இப்போது காண்கின்ற பல கோவில் குதிரைகள் சிமெண்டால் செய்யப்படுபவையே. அதற்கு மேல் ரசாயன நிறங்களை அடித்து அலகரிக்கின்றனர். இன்றும் ராஜேந்திரபுரம், கூத்தடிவயல், நார்த்தமலை , உருப்பெட்டி போன்ற இடங்களில் கொத்து கொத்தாக மண் குதிரைகள், காளைகள், யானைகள் உடைந்து மண்ணோடு போவதை காணலாம். மண்ணில் இருந்து வருவது மண்ணிற்கே போவது தானே விதி !
